#நல்ல செய்தி.! தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று 5,517 பேர் குணமடைந்தனர்.

By gowtham | Published: Aug 02, 2020 06:26 PM

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று 5,517 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. நாளை 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா உறுதி மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பிய எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்தனர் இதனால் உயிரிழப்பு 4132 ஆக உள்ளது.

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 76.27 % குணமடைந்துள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc