குட் நியூஸ் : 47 நாட்களுக்கு பிறகு நகைக்கடைகள் திறப்பு.!

குட் நியூஸ் : 47 நாட்களுக்கு பிறகு நகைக்கடைகள் திறப்பு.!

தமிழத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 3 ஆம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கில் 34 வகையான கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழத்தில் 47 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள நகைக்கடைகளில் முதல் கட்டமாக கிருமி நாசினி தெளித்து வர்த்தகத்தை தொடங்கினர். அங்கு மாதச் சீட்டுக்காக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். இதுகுறித்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி கூறுகையில், குறைவான ஊழியர்களை அமர்த்தியுள்ளோம் என்றும் முகக்கவசம் , சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் என்று கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நகைக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம் என்றும் ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டது. இதனால் எங்கள் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். பின்னர் எங்கள் தொழிலை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube