பொதுமக்களுக்கு நற்செய்தி..! தீபாவளியை முன்னிட்டு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு..!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல  இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது

By murugan | Published: Oct 23, 2019 11:58 AM

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல  இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து அதிக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறுகையில் , "கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து   நாகர்கோவில் வழியாக கொச்சுவேலி வரை முன்பதிவு இல்லா ரயிலை இயக்க முடிவு செய்து உள்ளோம். இந்த சிறப்பு ரயில் வருகின்ற 26-ம் தேதி காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து  புறப்பட்டு இரவு 11 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc