கேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..!

கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

By surya | Published: Feb 23, 2020 08:00 PM

கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது. Image result for ktm duke 200 மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 லிட்டர் டேங்க் பொருத்தப்பட்டன. அசத்தலான கிராபிக்ஸ் உடன் வெளிவரவுள்ள இந்த வண்டியில் டுயல் சேனல் எபிஎஸ் உடன் வந்துள்ளது. இது டியூக் 200 ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும். இன்ஜினை பொறுத்தளவில், பிஇஎஸ் 6 அப்டேட் உடன் அதே 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர், 4-வால்வ் லிக்குடு குல்டூ இன்ஜினை வழங்குகிறது. மேலும் இதில் அதே 24.6 பிஎச்பி பவர் மற்றும் 19.3 என்எம் டார்க் 7000 rpm இல் வழங்கப்படுகிறது. Image result for ktm duke 200 engine மேலும் இந்த வண்டியின் சஸ்பென்ஷன், இதற்கு முந்தைய மாடலில் இருந்ததையே பெற்றுள்ளது. மேலும் இந்த வாகனத்தில், டுவல் சேனல் ஏபிஎஸ் உடன் வந்துள்ளது. இந்தப் புதிய டியூக் 200 பி எஸ் 6 மாடலின் விலை, இந்திய மதிப்பில் 1.72 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc