இது தான் சாமி மெகா திருட்டு !ரூ.8,88,31,000 மதிப்புள்ள தங்க டாய்லெட் திருட்டு

ரூ. 8,88,31,000 மதிப்பிலான தங்க கழிவறை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த கலைஞர்  மயூரிஜியோ காட்டலன்  ( Maurizio Cattelan)  தங்க கழிவறை ஒன்றை வடிமைத்தார்.இது 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது. கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கழிவறை குக்கேன்ஹெய்ம் மியூசியத்தில்   (Guggenheim Museum in New York, United States) கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.இந்திய மதிப்பில் இந்த தங்கத்தால் ஆன கழிவறையின் மதிப்பு  ரூ. 8,88,31,000 ($1.25 million) ஆகும்.

இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) பிறந்த பெலன்ஹெய்ம் பேலஸில்  (Blenheim Palace)  தங்கத்தால் ஆன கழிவறை கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.அங்கு வைக்கப்பட்ட தங்க  கழிவறையை  தான் மர்ம நபர்கள் சிலர்  திருடிச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.