#BREAKING: தங்க கடத்தல் – தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூரில் கைது..?

#BREAKING: தங்க கடத்தல் – தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூரில் கைது..?

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது என தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று சுங்கத்துறை அதிகாரிகள் இந்தபார்சலை ஆய்வு செய்தனர்.

அப்போது, சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில்  தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து,  தலைமறைவான ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்த நிலையில், பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகள்  சுற்றிவளைத்து கைது செய்தனர் எனவும், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube