ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை ! சவரனுக்கு ரூ.512 உயர்ந்து விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன் 25,688 த்தை தாண்டியது.கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இத்தகைய உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது.தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி ஒரு கிராம் 60 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3,211-விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் : ரூ.25,688 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி 1 கிராம் : ரூ.40.90 விற்பனை செய்யப்படுகிறது.