தங்கம் விலை மீண்டும் உயர்வு! 29,000-ஐ நெருங்கியது!

கடந்த சில நாட்களாகவே  தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.28,856-க்கு விற்பனையாகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.3607-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.