கொரோனாவால் மீண்டும் சரிந்தது தங்கம் விலை.! சவரனுக்கு 984 ரூபாய் குறைவு.!

கொரோனாவால் மீண்டும் சரிந்தது தங்கம் விலை.! சவரனுக்கு 984 ரூபாய் குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.3,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.30,560க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,536 விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, ரூ.38.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களாகவே தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. காலையில் 584 ரூபாய் குறைந்திருந்த நிலையில், தற்போது 984 ரூபாய் குறைந்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிந்து, தங்க வர்த்தகம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக சரிவை ஈடுகட்ட, சுமார் ரூ.59 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க அமெரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து தங்க வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆபரண தங்கம் விலை மேலும் குறையலாம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube