தங்கத்தின் விலை ஒரே நாளில் 280 ரூபாய் உயர்வு.! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்.!

சென்னையில் ஏற்கெனவே 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.31,000 கடந்து விற்பனையாகி

By balakaliyamoorthy | Published: Feb 15, 2020 01:23 PM

சென்னையில் ஏற்கெனவே 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.31,000 கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) ரூ.3,889க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று ரூ.35 அதிகரித்து, ரூ.3,924க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்று ரூ.31,112க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 280 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்து ரூ.31, 392க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 200 ரூபாய் உயர்ந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சவரனுக்கு ரூ. ரூ.31, 392க்கு மேல் தங்கம் விற்கப்படுவதால் சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc