ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99.9 சதவீதம் வீழ்ச்சி!

 இந்தியாவில், 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி

By leena | Published: May 06, 2020 11:21 AM

 இந்தியாவில், 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது. 

உலகிலேயே தங்கத்தை பயன்படுத்துவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 110 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரலில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு, இந்த ஆண்டை ஒப்பிடும் போது, தங்கம் இறக்குமதி 99 சதவீதம் சரிந்துள்ளது.

 தங்கம் இறக்குமதியை பணமதிப்பீட்டில் கணக்கிட்டு பார்த்தால், கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கும், இந்த ஆண்டில், 21 கோடியே 45 லட்சத்திற்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வீழ்ச்சிக்கான காரணங்களாக வணிகர்கள் கூறியது என்னவென்றால், கொரோனா வைரஸ் பரவலால்  சேவைகள் ரத்து  செய்யப்பட்டதும், ஊரடங்கு உத்தரவால் நகை கடைகள் அடைக்கப்பட்டதும் தான் என கூறுகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc