தங்கத்தையும் விட்டுவைக்காத கொரோனா !

தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது

கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த பாதிப்பு தங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. கடந்தாண்டை ஒப்பிடுகையில் தங்கத்தின் தேவை வெகு அளவு குறைந்துள்ளது.

கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது. கொரோனாவினால் ஊரடங்கு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆபரண தங்கம், ஏனைய தங்க முதலீடு ஆகியவை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் தங்க வியாபார சங்கிலியை மறுசீரமைப்பு செய்யவேண்டும். இல்லையென்றால் இந்தாண்டு மிகவும் சவாலான ஆண்டாக மாறிவிடும் சூழல் உருவாகும்.

உலக தங்க கவுன்சில்  (WGC) இந்திய நிர்வாக தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ஆபரண தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டில் 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 47 ஆயிரம் கோடியாக இருந்த  நிலை, இந்த காலாண்டில் 37,580 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பொருளாதாரத்தின் நிலையற்ற நிலை, பொருளாதார வீழ்ச்சி, ஊரடங்கு ஆகியவை ஆகும். ‘ என WGC இந்திய நிர்வாக தலைவர் சோமசுந்தரம் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.