#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி

#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது.மேலும்  கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, 31.10.2020 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து,01.11.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாம்.அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.தினசரி 50% மாணவர்கள், 50% ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Join our channel google news Youtube