ஜடேஜா மைதானத்தில் போராடும் போது இந்த புத்தகத்தை படித்த கோலி ..!என்ன புத்தகம் அது ..?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று  வருகிறது.முதலில்

By murugan | Published: Aug 24, 2019 11:56 AM

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று  வருகிறது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 96.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்து உள்ளது. இப்போட்டியில் விராட் கோலி 9 ரன்களுடன் வெளியேறினர்.இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் தடுமாறி விளையாடி கொண்டு இருந்த போது   ஓய்வறையில் கேப்டன் கோலி  நிதானமாக  ஸ்டீவன் சில்வெஸ்டரின் புத்தகமான ” டிடாக்ஸ் யுவர் ஈகோ ” படித்துக்கொண்டிருந்தார். கோலி படித்து கொண்டு இருப்பதை மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவாக  சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் வைரலானது. விராட்கோலி புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது  ரவீந்திர ஜடேஜா அணியை  சரிவில் இருந்து மீட்க களத்தில் போராடிக்கொண்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர்  நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதில் ஒருவர் விராட் கோலிக்கு  ஏற்ற புத்தகத்தை யாரோ  ஒருவர் பரிசளித்து இருக்கிறார்கள்.  இது கண்டிப்பாக அவருக்கு தேவையான ஒன்றுதான் என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc