வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்க! அப்ப இதை கண்டிப்பா படிங்க!

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்க! அப்ப இதை கண்டிப்பா படிங்க!

இன்றைய நாகரீகமான உலகில், ஆண், பெண் இருவருமே வேலைக்கு சென்றால் தான், நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். இந்த ஆடம்பரமான உலகில் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட உழைத்து வாழ வேண்டி தான் உள்ளது. குடும்ப பெண் வீட்டிலும் அனைத்து பொறுப்புகளையும் செய்ய வேண்டி உள்ளது. வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முடித்து, தனது அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டி உள்ளது.

உங்களின் பொறுப்புகள் இது தான்

வீட்டில் உள்ள பெண்களின் முக்கியமான பொறுப்பு, குழந்தைகளை பராமரிப்பது தான். எனவே வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள குளகாய்களுக்கு தேவையான அனைத்தையும் முன்னதாகவே ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பின் வீட்டு வேலைகள், சமையல் வேலைகள், மார்க்கெட்  ,மளிகை பொருட்கள் வாங்குவது, துணிகளை துவைப்பது என அவர்களுக்கு பல வகையான கடமைகள் இருப்பதுண்டு.

 விழாக்கள்

வேலைக்கு செல்லும் பெண்களால் ஊரில் நடக்கும் திருவிழாக்களிலோ  அல்லது உறவினர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளிலோ  கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது. இதனால் அலுவலக வேலைகள் மற்றும் வீட்டு வேலைகளை திட்டமிட்டு செய்ய வேண்டி உள்ளது.

சாதனை

பெண்களை பொறுத்தவரையில், உடல் அளவிலும், மனதளவிலும் பெலவீனமானவர்கள் தான் ஆனால், பல வேதனைகளையும், தடைகளையும் தாண்டி சாதனை படைக்கும் பெண்களும் உள்ளனர்.