இந்தியாவில் “Gmail” மற்றும் “google” செயலில் சிக்கல்.. சரி செய்யும் பணிகள் தீவிரம்.!

இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கு “Gmail” மற்றும் “google” சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

முக்கியமாக ஏர்டெல் பயனர்களுக்கான “Gmail” மற்றும் “google” சேவைகள் நேற்று மாலை பல மணி நேரம் குறைந்துவிட்டதால் கூகிள் பயனர்கள் இந்தியாவில் தங்களுது புகாரை முன் வைத்தனர்.

இந்நிலையில் google சேவைகளின் செயலிழப்பு இருப்பதாக பிரபலமான செயலிழப்பு கண்காணிப்பு  “portal Down Detector” தெரிவித்துள்ளது. இதற்கிடையில் google பயனர்களுக்கு கூறுகையில், நாங்கள் சிக்கலைத் சரி செய்து வருகிறோம். மேலும் “Down Detector” கிட்டத்தட்ட 62 சதவீத பயனர்கள் ஜிமெயிலில் சிக்கல்களைப் பதிவுசெய்துள்ளதாகவும், மெயில் அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்றும் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.