நோய் என்னும் களையை விதைக்கும் பளபளக்கும் எண்ணெய்கள்….!!!

நோய் என்னும் களையை விதைக்கும் பளபளக்கும் எண்ணெய்கள்….!!!

adulterated oil disease

நம் அன்றாட வாழ்வில் நாம் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான மற்றும் பாதுகாப்பான சாப்பாடு பொருட்களை தான் தேடி அலைந்து வாங்குவதுண்டு. ஆனால் நாம் விலையுயர்ந்த பொருட்களை வாங்குகிறோம், நமக்கு தெரிவதில்லை விலை கொடுத்து நோயை விலைக்கு வாங்குகிறோம் என்று, கண்ணுக்கு பளபளப்பாக இருப்பதெல்லாம் நமது உடல் ஆரோக்கியத்தை பளபளப்பாக வைப்பதில்லை.

அதிலும் எண்ணெயை பொறுத்தவரையில், மிக கவனமாக கையாள வேண்டும். நமது சமயலறையில் எண்ணெய் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.

கலப்பட எண்ணெய் :

நாம் பயன்படுத்தும் விலையுயர்ந்த எண்ணெயால், புற்றுநோய், பக்கவாத நோய்கள், கல்லீரல் பாதிப்பு, ஒவ்வாமை மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமாகிவிட்டது. எண்ணெய்களில் கலப்படங்களும் அதிகரித்து விட்டது. இந்த கலப்படத்திலிருந்து தப்பித்து ஆரோக்கியமாய் வாழ, பழங்கால முறைப்படி செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களே உதவும்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய காந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றில் ரப்பர் ஆயில், குரூட் ஆயில் போன்ற இதர எண்ணெய்களின் கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

மரச்செக்கு எண்ணெய் :

மரச்செக்கில் இயற்கையாக தயாரிக்கப்படும் எண்ணெயில் இந்த அபாயங்கள் இல்லை. எண்ணெய் வித்துகளில் இயற்கையாகவே கிடைக்கும் சில நன்மைகள் அழியாமலும் காக்கப்படுகின்றன.

செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு அடர் நிறத்தில் கசடுகளோடு இருப்பதால், பலருக்கு பிடிப்பதில்லை. கவர்ச்சியான பேக்கிங்கில், பார்ப்பதற்கு கண்ணாடி போன்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயினையே ஆபத்து உணராமல் வாங்கி பயன்படுத்துகின்றனர். பளபளவென இருக்கும் எண்ணெயால் நமது உடலுக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *