முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் கை குழந்தையுடன் பணியில் ஈடுபட்ட பெண் காவலர்..!

முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் கை குழந்தையுடன் பணியில் ஈடுபட்ட பெண் காவலர்..!

உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவுதமபுத்தர் பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நொய்டா நகரில் ரூ.1,452 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும்  ரூ.1,369 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தருண் விஜய் ,மகேஷ் சர்மா  போன்ற எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் பெண் காவலர் பிரீத்தி ராணி ( 20) என்பவரும் ஈடுபட்டு இருந்தார். அவர் பாதுகாப்பு பணியில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ஈடுபட்டு இருந்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ,எனது கணவர் இன்று தேர்வு சென்றுள்ளார். அதனால் அவரால் இன்று குழந்தையை கவனித்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எனது குழந்தையை பாதுகாப்பில் வைத்திருக்கிறேன் என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube