பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் –அரசாணை வெளியீடு

பேரவையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதியை  மாநில பெண்குழந்தைகள்

By Fahad | Published: Apr 02 2020 01:01 PM

பேரவையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதியை  மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பிப்ரவரி 24-ஆம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது.தமிழக சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.அவரது அறிவிப்பில்,  பெண் குழந்தைகளுக்காக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாளான, வரும், 24ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக, தமிழக அரசால் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதியை  மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்த நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.