பிரபல விஞ்ஞானியிடமிருந்து மாதவனுக்கு கிடைத்த பரிசு!

மாதவன்  தமிழில் நடித்தது சில படங்கள் என்றாலும் இன்னும் மனதில் ஆழப்பதிந்திருக்கும். அலைப்பாயுதே முதல் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா வரை அவரின் முக்கிய படங்கள் பல உண்டு.

பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட அவர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினாலும் அவ்வப்போது தமிழிலும் தலைகாட்டி வருகிறார்.தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானியின் படத்தில் நடிக்கிறார்.

ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறுபடமாக்கப்படுகிறது. இதில் மாதவன் நம்பியாக நடிக்கிறார். இதற்கு அந்த விஞ்ஞானி, மாதவன் என் கேரக்டரை உள்வாங்கிய விதம் பிரம்மிப்பாக இருந்தது.

அவர் என் வாழ்க்கையில் வலிகள், போராட்டம், பாதிப்புகள் என பலவற்றை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் என்னை போல மாறியிருப்பதை திரையில் பார்க்க காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment