நீங்கள் செய்யும் இந்த 7 செயல்கள் நிச்சயம் கிருமிகளை பரப்பி நோய்களை ஏற்படுத்தும்.!

நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறோம்; நாம் செய்யும் செயல்களில் எது சரி, எது தவறு என்று மூளை எடுத்துக் கூறினாலும், தினம் வழக்கமான பழக்கத்தை மனம் கைவிட மறுக்கும். இவ்வாறு நம்மை அறியாமலேயே நாம் செய்யும் சில செயல்கள் கிருமிகளை பரப்பி, நம்மை நோய்த்தொற்றில் ஆற்ற வல்லது.

இந்த பதிப்பில் நாம் செய்யும் எந்த செயல்கள் நிச்சயம் கிருமிகளை பரப்பி நோய்களை ஏற்படுத்தும் என்பதனை பற்றி படித்து அறியலாம்.

கழிவறை – மொபைல்

பெரும்பாலோனோர் கழிவறை செல்லும் போஸுது கூட அலைபேசியை பிரியமுடியாமல் உடன் எடுத்துச் சென்று அங்கும் பயன்படுத்துகின்றனர்; கழிவறை வேலைகளை முடித்துவிட்டு என்ன தான் கை – கால்களில் இருக்கும் கிருமிகளை நன்கு கழுவி நீக்கினாலும், நம் மொபைலில் ஒட்டிக்கொண்ட கிருமிகளை பற்றி நாம் அறிவது கூட இல்லை.

அப்படியே அறிந்தாலும் மொபைலை தண்ணீர் ஊற்றி கழுவவும் இயலாது. இது கண்டிப்பாக ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டிய முக்கிய பழக்கமாகும்.

சோப்பு வைக்கும் ஆப்பு

பலர் ஒரே சோப்புக்கட்டியை பயன்படுத்தினால், எளிதில் கிருமிகள் பரவி நோய்த்தொற்று உண்டாகும் பாதிப்பு நேரலாம். ஆகையால் தனித்தனி சோப்புகள் அல்லது திரவ சோப்புகளை பயன்படுத்த முயற்சிக்கலாம்.

கைகழுவுதல்

கைகளை 20-30 நொடிகள் மட்டுமே கழுவ வேண்டும். அதிக நேரம் காய் கழுவினால், காய் துடைக்க பலரும் ஒரே துண்டை பயன்படுத்தினால், கைகளை பொது இடத்தில் இருக்கும் ஈரம்போக்கியின் உதவி கொண்டு உணர்த்தினால் எளிதில் நோய்த்தொற்றுகள் பரவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

வெஸ்டர்ன் டாய்லெட்

இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துகையில், கழிவறை கோப்பையை மூடிவிட்டு தான் ஃபிளஷ் செய்ய வேண்டும்; ஏனெனில் நீரும் மலமும் சேர்ந்து அதிக கிருமிகளை உண்டு செய்யும்; கோப்பை திறந்திருந்தால் அது கழிவறை முழுதும் பரவி உங்களையும் அடைந்து விடும். ஆகையால் கோப்பையை மூடிவிட்டு ஃபிளஷ் செய்யவும்.  

பேனா பழக்கம்

நம்மில் பலருக்கும் கையில் உள்ள பொருட்களை, முக்கியமாக பேனா போன்ற பொருட்களை வாயில் வைத்து கடிக்கும் பழக்கம் உண்டு; இது இருப்பதிலேயே மோசமான, அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பழக்கம். முடிந்தவரை இப்பழக்கத்தை கைவிட முயலுங்கள்.

பற்களால் பிய்த்தல்

எந்த  பொருளையும், வாய்க்கு அருகாமையில் கொணர்ந்து, பற்களால் பிய்க்கும் பொழுது வாயில் உள்ள கிருமிகள் எளிதில் நாம் பிரிக்கும் பொருட்களை அடைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயலுங்கள்.

பிறந்தநாள் மெழுகுவர்த்தி

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது ஏற்றி வைத்திருக்கும் மெழுகுகளை வாயால் ஊதி அணைக்கும் பொழுது, வாயில் உள்ள கிருமிகள் காற்று மூலம் பரவி பிறந்தநாள் கேக்கை அடையும் வாய்ப்பு அதிகம்.

அந்த கிருமிகள் அடங்கிய கேக்கை பலருக்கும் அளிக்கும் பொழுது நமக்குத் தெரியாமலேயே நாம் நோய்க்கிருமிகளை பரப்புகிறோம்; நோய்க்கிருமிகளும் பரவுகின்றன. நம்மால் இயன்ற அளவு இம்மாதிரியான பழக்க வழக்கங்களை தவிர்த்து, நோய்நொடியின்றி வாழ்வோமாக!

author avatar
Soundarya

Leave a Comment