இன்று ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம்…!!

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்பட்டு வரும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று – பிப்ரவரி 22,1732.

அமெரிக்க சுதந்திரப் போரில் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்ற 1775ஆம் ஆண்டு முதல், சுதந்திர அமெரிக்காவின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, இவர் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசுகள் ஏற்குமாறு செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். இவரது நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் தலைநகருக்கு வாஷிங்டன் என அந்நாட்டு அமெரிக்க மக்கள் பெயரிட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment