மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.! பிரபல நடிகரின் ட்விட்.!

தமிழகத்தில் 5, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து

By balakaliyamoorthy | Published: Feb 05, 2020 07:45 AM

  • தமிழகத்தில் 5, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது எனவும், ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
  • இதுகுறித்து நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது என்று கூறி, கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை ஏற்று தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. பின்னர் பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில் நேற்று 5, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது எனவும், ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த முடிவை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது என்றும், மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது என தெரிவித்திருந்தார். மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது என்று கூறி, கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc