கஜா புயல்:ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு ...!

Caja Storm: Freight Forward to Rail Relief Products for the Next 15 Days ...

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பினார். இந்நிலையில்  முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர்  10 ஆம் தேதி வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்து  ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.