கங்குலி மற்றும் சச்சினை ஓரங்கட்டி புதிய சாதனை படைத்த ஹிட்மேன்.!

கங்குலி மற்றும் சச்சினை ஓரங்கட்டி புதிய சாதனை படைத்த ஹிட்மேன்.!

  • இந்திய அணியின்தொடக்க  வீரர் நேற்றைய போட்டியில்  ஹிட்மேன் 4 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய புதிய மைல்கல் சாதனை படைத்தார்.
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹிட்மேன் பிடித்துள்ளார்.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. நேற்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் அடித்தது.பின்னர் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின்தொடக்க  வீரர் ஹிட்மேன் 4 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய புதிய மைல்கல் சாதனை படைத்தார்.இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹிட்மேன் பிடித்துள்ளார்.

இந்த சாதனையை ஹிட்மேன் 217 இன்னிங்சில் எட்டியுள்ளார். அதிவேகமாக 9 ஆயிரம் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (194 இன்னிங்சில்) முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் 208 இன்னிங்சிலும் , மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மா தற்போது உள்ளார்.

இதைத்தொடர்ந்து கங்குலி 228 இன்னிங்சிலும் , சச்சின் 235 இன்னிங்சிலும்,லாரா 239 இன்னிங்சிலும் இந்த சாதனையை படைத்து இந்த பட்டியலில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.இப்போட்டியில் ஹிட்மேன் 119 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube