காதி வேட்டி,காதி தாவணியுடன் காந்திய பள்ளி அறிவீர்களா நீங்கள்???…

தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம் நண்பர்களே!!!!!!!
பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை …. சீருடை !
” மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை…. வேட்டி சட்டை தான் !

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.
No automatic alt text available.
அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.
கதர் வேட்டிதான்.
வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
Image may contain: 5 people, people standing and outdoor
பள்ளியில் ஆசிரியைகளை ‘அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை ‘ஐயா’ – என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.
வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.
yoga
சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.
திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.
prayer
புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.
ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.
இது தவிர சுய துப்பரவிற்க்கு மிகவும் முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.இது ஆசிரியர்களுக்கும் விதிவிலக்கல்ல.
Image result for gandhi niketan ashram t kallupatti
பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடலும்,பாதபூஜையும் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
Image may contain: one or more people, people sitting and crowd
மிகவும் மனதைதொடும் நிகழ்வு இது.
No automatic alt text available.
இன்றும் இதே கொள்கை ,கோட்பாடுகளுடனும்,அரசு ஆணைப்படி சீருடை மட்டும் மாறிய நிலையில் இன்றளவும் காந்திய கொள்கையுடன் இயங்கும் காந்தி நிகேதன் பள்ளி வரலாற்றில் மிகவும் சிறப்பு….!!!!
author avatar
kavitha

Leave a Comment