அடேய்!! சீனாக்காரா! இதோ வரோம்டா! புயலென எல்லைக்கு புறப்பட்ட இளம்படை!

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறியது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு மற்றும் அவர்கள் தாக்கியதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து  இரு தரப்பிலும் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எல்லையில் இரு நாடுகளும் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும் இந்திய சீனா மீதான கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்களின் வீரமரணம் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி நிலையில் தான்  சீன எதிர்ப்பு மனநிலை இந்தியர்கள் இடையே  தற்போது அதிகரித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.

இவ்வாறு நாடெங்கும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ள நிலையில்  உத்தரபிரதேசத்தில் பத்து சிறுவர்கள் ராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவோம் என்று கூறி எல்லைக்கு புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து சிறுவர்கள் சாலையில் ஊர்வலமாக வந்தனர்.அவர்களை மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.விசாரிப்பின் போது இந்திய ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற சீனாவுக்கு பாடம் கற்பிக்கப்போவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இளம் படைகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

author avatar
kavitha