கஜா புயல் பாதிப்பு :டெல்லியில் இன்று நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை..!

நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
Image result for gaja death
 
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

பின்  பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.அதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது.  இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண  நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியது மத்திய உள்துறை அமைச்சகம் . மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரியுள்ள நிதி மற்றும் தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விளக்கமளிக்கிறார் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
அதேபோல்  தமிழக வருவாய் செயலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Comment