முதல் பெண் களநடுவராக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறார் ஜி.எஸ்.லட்சுமி

கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி (51) தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஐசிசி சர்வதேச நடுவர் குழு  லட்சுமியை நியமித்து  அறிவித்துள்ளது.

இவர் கடந்த 2008-2009  ஆண்டுகளில்  நடந்த சீசனில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஜி.எஸ்.லட்சுமி நடுவராக  இருந்துள்ளார். மேலும் இவர் சர்வதேசப்  மகளிர் கிரிக்கெட் போட்டிகளில்  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கும் களநடுவராக   இருந்துள்ளார்.

தற்போது அவர் களநடுவராக நியமிக்கப்பட்டது குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்.அதில் ஐசிசினுடைய சர்வதேச நடுவர் குழு என்னை தேர்வு செய்தது  கிரிக்கெட் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.இந்திய கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட நாட்கள் விளையாடி இருக்கிறேன்.

அதே போல கள நடுவராகவும் செயல்பட்டுள்ளேன். தற்போது ஐசிசி நடுவராக                 தேர்ந்தேடுத்துள்ளது  கிரிக்கெட் வீரராகவும்,அதே சமயம் களநடுவராக எனக்கு  கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளில்  சிறந்த போட்டி களநடுவராக செயல்படுவேன்  என்ற நம்பிக்கை உள்ளது.மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ மற்றும் என்னுடைய மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எல்லோருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.இதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராக பங்கேற்கும் முதல் பெண் நடுவர் இவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

 

author avatar
kavitha

Leave a Comment