கோவை அருகே மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து

கோவை அருகே மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து

கோவை இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்ட மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மிக்-21 போர் விமானம் கோவை அருகே இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக  மிக்-21 போர் விமானத்தில் இருந்து  பெட்ரோல் டேங் கழன்று விழுந்தது .மொத்தம் 2 பெட்ரோல் டேங்குகள் இந்த விமானத்தில் இருக்கும்.அதில் ஓன்று கழன்று விழுந்தது.1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பெட்ரோல்  டேங் சரியாக விளைநிலத்தில் விழுந்து தீப்பிடித்தது.இந்த விலை நிலத்தில் இதனால் 3 அடிக்கு மேல் பள்ளம் விழுந்தது.பின்னர் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Join our channel google news Youtube