வேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..!

வேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..!

தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு  மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையை ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த இரண்டு விழாவிலும்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் , துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.