ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ரயில் சென்னை வந்தடைந்தது !

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு         ரூ .65  கோடி நிதி ஒதுக்கியது.

இதற்கான பணிகளை கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து 70 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பட்டு  50 வேகன்கள் மூலம் ரயில் இன்று காலை 7 மணிக்கு குடிநீரை ஏற்றி கொண்டு புறப்பட்டது.

குடிநீர் ஏற்றி வந்த  ரயில் சென்னை வில்லிவாகத்திற்கு சற்று நேரத்திற்கு முன் வந்து சேர்ந்தது. இதையடுத்து வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று  குடிநீர் நிலையத்துக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்து உள்ளனர்.

author avatar
murugan