ஈழத்து பெண் லாஸ்லியாவின் 'பிரண்ஷிப்' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று.!

லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின்

By ragi | Published: Jun 05, 2020 10:30 AM

லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பள்ளி படிப்பு முடிந்தவுடன் மேல் படிப்பு படிக்க முடியாமல் தாமதமாக கோயம்பத்தூர் கல்லூரியில் சேரும் ஒரு வடமாநில இளைஞராக ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் அர்ஜூன் அவர்கள் வில்லன் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன் 50% முடிந்ததாகவும், தற்போது லாக்டவுன் காரணமாக தள்ளி வைத்ததாகவும், விரைவில் கொரோனா பாதிப்பு முடிந்ததும் படத்தை முடித்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பதாகவும் சமீபத்தில் இயக்குநர் ஜான் பால் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று 4 மணிக்கு வெளியிடுவதாக இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் முதல் முறையாக சினிமாவில் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

 

Step2: Place in ads Display sections

unicc