கவனத்திற்கு.! நீட் மாணவர்களுக்கான இலவச ஆப் அறிமுகம் .!

ஆகாஷ் என்ற கல்வி நிறுவனம்  நீட் மாணவர்களுக்கான இலவச ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு “நீட் சேலஞ்சர் (NEET Challenger) ஆப்” என்று பெயரிடப்பட்டது. இந்த ஆப்பில், கடந்த 10 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் முழுமையாக இருப்பதால், வரவிருக்கும் நீட் தேர்வை சிறப்பாக எழுத உதவுகிறது.

இந்த “நீட் சேலஞ்சர் (NEET Challenger)ஆப்” ஆகாஷ் நிறுவனத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் இலவசமாக இதை Google Play Store லிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்ய, ஒரு மாணவர்கள் தரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், பாடங்களின் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்யலாம், அங்கு கடந்த 10 ஆண்டுகளில் கேட்கப்பட்ட NEET / AIPMT இன் முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை இருக்கும்.

இந்த ஆப் குறித்து, ஆகாஷ் கல்வி இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆகாஷ் சவுத்ரி கூறுகையில், “ நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக வழக்கமான வகுப்புகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்காக இந்த ஆப் உதவும்.
இந்த ஆப் மூலம், மாணவர்கள் தங்கள் வீட்டின் வசதிக்கேற்ப தரமான வழிகாட்டுதலைப் பெறலாம் என கூறினார்.

author avatar
murugan