நிலைகுலைந்து..போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட பிரான்ஸ்..!அவசரநிலை பிரகடனம்..!!

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான வரியானது அதிகபடுத்தபட்டுள்ளது.இதனை கண்டித்து இன்று அந்நாடு முழுவதும் மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டங்கள் ட்விட்டரில் #YELLOW JACKETS என்ற ஹெஸ்டேக்கில் பதிவிடப்பட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள்.இந்நிலையில் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் முகமூடி அணிந்து வந்த இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் போராட்டத்தால்  அந்நாட்டின் அமைதி நிலை சீர்குழைந்து காணப்படுவதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அரசு சார்பில் போராட்டங்களில் ஈடுபடுவர்கள் மேற்கொண்டு வரும் வன்முறையை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் க்ரீவெக்ஸ் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் இந்த போராட்டங்கள் யார் தலைமையில் நடக்கின்றது என்றே தெரியாத நிலையில் யாரை அழைத்துப் பேசுவது என்று அரசு குழம்பி போய் உள்ளது.
போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் போராட்டத்தை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்களுடன் நடத்த வேண்டியது குறித்து அதிபர் மேக்ரான் ஆலோசித்து வருகிறார்.மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அவசர நிலை பிரகடனம் குறித்து ஆலோசித்து பிரான்ஸ் அரசு முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.ஆனால் அங்கு போராட்டம் எல்லை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
https://twitter.com/NBbreaking/status/1068876716280557568

author avatar
kavitha

Leave a Comment