நான்காவது சந்திப்பு! லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை!

லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை.

கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில், இன்று மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமண்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். எல்லை மோதலுக்கு பிறகு,  இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு  இடையே நடைபெறும் நான்காவது சந்திப்பு ஆகும். இந்த  சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள், சீன எல்லைக்குள் வைத்து நடைபெற்றது. ஜூன் 30 அன்று கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீனப் படைகள் பின்நோக்கி நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் இடையே ஜூலை 5-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.