இன்றைய போட்டியில் நான்கு அணிகள் மோதல் !

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டு  போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் ஒரு போட்டியில் இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது. இந்தப் போட்டியானது  லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இதுவரை இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும் ,ஒரு பேட்டியில் தோல்வியில் முடிந்துள்ளது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று உள்ளது.ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா  அணியின், ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது.இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியானது இந்திய நேரப்படிமாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. விளையாடிய  3 போட்டிகளிலும்  தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா இதுவரை 4 போட்டிகளில் மூன்று போட்டியில் தோல்வியும், ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

author avatar
murugan