முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு "பாரதரத்னா விருது" - ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு 2019 ம் ஆண்டிற்கான பாரதரத்னா

By Fahad | Published: Apr 01 2020 05:16 AM

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு 2019 ம் ஆண்டிற்கான பாரதரத்னா விருதினை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நாட்டிற்க்கு பெரும் புகழ் கிடைக்க செய்தல், நாட்டிற்காக இழப்புகள் பல சந்தித்தல், வீர தீர செயல் புரிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சார்பில் பாரதரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்க்கான விருது கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி , மறைந்த சமூக செயல்பாட்டாளர் நானா தேஷ்முக் மற்றும் மறைந்த பாடகர் புபேன் ஹசாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.   பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த மூவருக்கும் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். பிரணாப் முகர்ஜி அவர்களை நேரில் வந்து குடியரசு தலைவர் கைகளால் விருதினை பெற்று கொண்டார். மற்ற இருவர்க்கும் அவர்கள் குடும்பத்தினர் விருதினை பெற்று கொண்டனர்.  

More News From barath rathna