முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள்! அரசியல் தலைவர்கள் மரியாதை!

நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகளும் மறைந்த முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தார். அவர் 1966 முதல் 1977 வரையிலான காலகட்டத்திலும்,  1980 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். 1984 அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர் சதாவ் ராஜீவ் தலைமையில் டெல்லியில் காங்கிரஸ்காரர்கள் இந்திரா காந்தி நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு மரியாதை செலுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.