முன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல்

By Fahad | Published: Mar 28 2020 06:51 PM

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.நடந்து முடித்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் போட்டியுடன் வெளியேறியதால் பாகிஸ்தான் அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. Image result for Grant Flower இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியின்  பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அளித்த பேட்டியில் , பாகிஸ்தானில் எனக்கு பணி சுதந்திரமும் , பாதுகாப்பு விஷயங்களும் இல்லை. நான் பயிற்சியாளராக இருந்த போது பாகிஸ்தான் அணி சாம்பியன் டிராபியை வென்று உள்ளது.இந்திய அணியை ஓவலில் தோற்கடித்து உள்ளது.நான் பயிற்சி அளித்ததில் சிறந்த வீரர் பாபர் அசாம். Image result for Grant Flower பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்களாக உள்ளார்கள்.அங்கு அரசியல் அதிகமாக உள்ளது.அதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மிக அதிகமாக அரசியல் உள்ளது. பாகிஸ்தான் அணி எதிர் காலத்தில் நன்றாக செயல்பட வாழ்த்துக்கள் வீரர்கள் பின்னால் நில்லுங்கள்,நேர்மறையாக சிந்தனையோடு செயல்படுங்கள் என கூறினார்.