முன்னாள் திமுக எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் காலமானார்.!

முன்னாள் திமுக எம்.எல்.ஏ உடல்நலக்குறைவால் காலமானார்.!

உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் நேற்று காலமானார்.

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் குழந்தை தமிழரசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இவர் காலமானார். முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசனின் மறைவு திமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube