நம்ம பாரம்பரியத்தை மறந்துராதீங்க…..! அது தான் நமக்கு கைகொடுக்கும்….!!!

  • நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றான நுங்கு பற்றியும், அதன் மருத்துவ குணங்கள்.

இன்றைய நவீன காலகட்டடத்தில் அனைத்துமே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நவீன முறைகள் நமது வாழ்க்கையில் பல விதவிதமான நோய்களை கொண்டு வருகிறது.

நாம் நமது பாரம்பரித்தை என்று மறந்தோமோ அன்றே, நம்முடைய உடலின் ஆரோக்கியமும் தொலைந்து விட்டது. நமது பாரம்பரிய உணவு முறைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்தது.

ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு முறைகள் அனைத்தும், நமது உடலில் நோய்களை ஏற்படுத்துவதாக தான் உள்ளது.

நுங்கு

இன்று இந்த பதிவில் நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றான நுங்கு பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம்.

Image result for நுங்கு

நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

உடல் குளிர்ச்சி

குளிர் காலம் முடிந்து தற்போது வெயில் காலம் துவங்கி உள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்க நாம் அதிகமாக குளிர்ச்சியான பாணங்கள் தான் அருந்த வேண்டும் என்று விரும்புவதுண்டு.

Image result for உடல் குளிர்ச்சி

அந்த வகையில், நுங்கு நமது உடலில் வெப்பத்தின் தாக்கத்தை தவிர்த்து, குளிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் உடலை பாதிக்காமல் காக்கும்.

அம்மை நோய்

பொதுவாக கோடை காலங்களில் பலரையும் அம்மை நோய் தாக்குவதுண்டு. இந்த அம்மை நோய் உடல் உஷ்ணத்தால் தான் ஏற்படுகிறது. அம்மை நோய்களை விரைவாக நீக்க கூடிய ஒரு உணவாக நுங்கு இருக்கிறது.

Image result for அம்மை நோய்

எனவே அம்மை நோய் உள்ளவர்கள் அதிகமாக நுங்கு சாப்பிடுவது நல்லது.

உடல் எடை

நுங்கு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்கில் கொழுப்பை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல்அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

Related image

எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நுங்கை சாப்பிட்டு வந்தால், அது கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது.

கருவுற்ற பெண்கள்

Image result for கருவுற்ற பெண்கள்

நுங்கு கருவுற்ற பெண்களின் உடலுக்கு ஆரோக்கியத்தை தாரக கூடிய ஒரு சிறந்த உணவாகும். பெண்கள் கருவுற்ற காலங்களில் ஏற்பாடாகி கூடிய உணவு செரிமானம் ஏற்படாமல் போவது, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மார்பக புற்று நோய்

Related image

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று, மார்பகப் நோய். நுங்கில் உள்ள  “ஆன்தோசயனின்” எனப்படும் வேதி பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

கண்பார்வை

நுங்கு நமது உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் நமது கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

Image result for கண்பார்வை

தினமும் காலையில் நுங்கு சாப்பிடுவதால் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண்பார்வை திறனையும் மேம்மபடுத்துகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment