உருட்டு கட்டையால் பெண் வனத்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய ஆளுங்கட்சி எம்எல்ஏ உறவினர்

தெலுங்கனா மாநிலம் சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சர்சாலா பகுதியில் வனத்துறை அதிகாரியான அனிதா தெலுங்கனா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட அந்த கிராமத்தில் உள்ளசில  அரசு நிலங்களை தேர்வு செய்து அனிதா  நட சென்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அந்த கிராம மக்கள் அந்த அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடி உள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி எம்எல்ஏ வான கொனரு கோணப்பாவின்    சகோதரான கொனரு  கிருஷ்ணா ராவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது அவர் தனது ஆதரவாளர்க்ளுடன் அதிகாரியை நோக்கி வந்தார்.

இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கையில் கிடைத்த கட்டையால் தனது ஆதரவாளர் உடன் இணைந்து வனத்துறை அதிகாரி அனிதாவை சரமாரியாக தாக்கினார் கொனரு கிருஷ்ணராவ்.அரசு நிலத்தில் மரகன்றுகளை நட சென்ற வனத்துறை அதிகாரிக்கு நடந்த இந்த சம்பவம் தெளுங்கானாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் ஆளுங்கட்சி எம்எல்ஏ சகோதரர் அதிகாரியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

author avatar
kavitha