பரிசோதனை மூலம் புலி குட்டியை மீண்டும் தனது தாயுடன் சேர்த்த வனத்துறையினர்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தின் சிச்ச்பள்ளி வனப்பகுதியில் ஒரு பண்ணை உள்ளது. அந்த பண்ணைக்கு அருகே உள்ள பள்ளத்தில் கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் தேதி புலிக்குட்டி ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

பிறந்து இரண்டு மாதங்களே ஆன அந்த குட்டிப்புலியை தனது தாயுடன் மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை வனத்துறை மேற்கொண்டனர். இந்நிலையில், அந்த புலிக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டனர். அது , T2 இனமென கண்டறியப்பட்டது. மேலும், அந்த ரத்த மாதிரி, அதே பகுதியில் குட்டிகளுடன் உளாவிக்கொண்டிருந்த ஒரு குட்டிப்புலி உட்பட இரண்டு புலிகளுக்கு பொருந்தியது.

இதன்மூலம் அந்த குட்டியை தாய் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த குட்டியை அந்த தாயிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். மேலும், டி.என்.ஏ பரிசோதனை மூலம் புலி குட்டியை மீண்டும் தனது தாயுடன் சேர்த்து, இதுவே முதல் முறையாகும் என தெரிவித்தனர்.