கால்டாக்ஸிக்குள் ஏறிய வெளிநாட்டு பெண்!பிறகு நடந்த வெறிச்செயல்!

பெங்களூரு டாக்ஸி புக் செய்து ஏறிய வெளிநாட்டு பெண்.காருக்குள் பதுங்கி

By sulai | Published: Jan 21, 2020 08:36 PM

  • பெங்களூரு டாக்ஸி புக் செய்து ஏறிய வெளிநாட்டு பெண்.காருக்குள் பதுங்கி இருந்த 3 நபர்கள்.பின்னர் நடந்த வெறிச்செயல்.
  • இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல பாணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பெங்களூரில் உள்ள டோட்டபுல்லாரபுர சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து ஓரமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்து நிர்வாணமான நிலையில் பெண் ஒருவர் வீசப்பட்டுள்ளார். பின்னர் அந்த கார் வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளது.சாலையில் விழுந்த அந்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்த அந்த பெண் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் கொடுத்த ஆடையை உடுத்திய அந்த பெண் காவல்நிலையத்தை சென்றடைந்து தனக்கு நேர்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையாக அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அந்த பெண் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் சிறுநீரக கல் சிகிச்சைக்காக டெல்லி வந்ததாகவும் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.மேலும் அந்த பெண் பெங்களூரு வந்தடைந்து ஒரு டாக்ஸி புக் செய்துள்ளார். அப்போது அந்த காரில் மறைந்திருந்த 3 நபர்கள் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் அந்த பெண் வைத்திருந்த செல்போன் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு  நிர்வாணமாக்கி சாலையில் தூக்கி எறிந்துள்ளனர். இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல பாணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc