கட்டாயத் திருமணம் – காவல் நிலையத்தில் புகார் அளித்த மாணவிக்கு பாராட்டு!

கட்டாய திருமணத்தை எதிர்த்து நேரடியக காவல் நிலையத்துக்கு புகார் மனுவுடன் சென்ற சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது கொண்ட சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது தாத்தா பாட்டி 28 வயது நிறைந்த இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார், இருப்பினும் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு மலையடிவார கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி மணமகனை கட்டி கொள்ளும்படி அதட்டப்பட்டுள்ளார். வெளியேற முயன்ற சிறுமி இது சரிப்படாது என்பதை நினைவில் கொண்டு துணிச்சலாக மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி அவர்களிடம் சென்று புகார் அளித்துள்ளார். பின் வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற சிறுமி நேரடியாக காவல் நிலையத்துக்கு சென்று தனக்கு நடந்த கொடூரமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

பின்பும் எவ்வாறு உனக்கு இப்படிப்பட்ட துணிச்சல் வந்தது என்று காவல் நிலையத்தில் பாராட்டுடன் கேள்வி கேட்கப்பட்டதற்கு எங்களது பள்ளியில் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு நாடகத்தை நான் பார்த்திருக்கிறேன். எந்தவொரு அநீதியான புகாரையும் துணிச்சலாக மேற்கொள்ளலாம் என்று அதன் கருத்து இருந்தது. அதனால்தான் எனக்கு இந்த தைரியம் வந்தது, என்று தனது வீரம் வந்த கதையையும் பிடிப்பில்லாத திருமணத்தையும் பற்றிக் கூறவே போலீசார்கள் உடனடியாக மாணவிக்கு நீதி வழங்க செயல்பட்டு வருகின்றனர்.

author avatar
Rebekal