முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்.!

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில்  தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம்  ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் துவங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அகழாய்வு பணிகள் துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தநிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில்  தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த அகழாய்வு பணியை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார்.

ஆதிச்சநல்லூரில் 6-ம் கட்ட அகழாய்வும், சிவகளையில்  முதல் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. சிவகளை அகழாய்வு பணிக்கு  ரூ. 32 லட்சம் மதிப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆதிச்சநல்லூரில் 1876, 1902, 1905, 2004, 2005 ஆகிய வருடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள்  வெளிநாட்டினர் மற்றும் மத்தியல் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது. தற்போது முதல் முறையாக தமிழக அரசு சார்பாக  அகழாய்வு பணி துவங்கி உள்ளது.

author avatar
Dinasuvadu desk