மேட்டூர் அணை :டெல்டா பாசனத்திற்காக நீர்திறப்பு 10,000 கன அடியாக உயந்தது.!

  • நேற்று  மேட்டூர் அணையில் பாசனத்திற்காக இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
  • மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததால் நேற்று காலை முதல் வினாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. 

வடகிழக்கு பருவமழை பெய்தது காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று  மேட்டூர் அணையில் பாசனத்திற்காக இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தற்போது மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நேற்று காலை முதல் வினாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,926 கன அடியாக உள்ளது.

அணையின் நீர்மட்டம் 118.63 அடியாக உள்ளது. தற்போது அணையில் 91.302 டிஎம்சி  நீர் இருப்பு உள்ளது.

author avatar
murugan