உடைந்த எலும்புகள் இரும்பு போல் வலுவடைய நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவுகள் !

எலும்பு முறிவு வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை ஆகும்.இந்த எலும்பு முறிவு  ஏற்பட்டால் நமது அன்றாட வாழ்க்கையே சற்று முடங்கி விடும்.மேலும் நாம் பிறரின் உதவியில்லாமல் ஒரு வேலைகளையும் செய்ய இயலாது.

உடைந்த எலும்புகளை சீக்கீரத்தில் வலுவடைய செய்யும் உணவு வகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

பால் பொருட்கள் :

செறிவூட்ட பால் ,தயிர், மற்றும் மோர் முதலிய பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.எனவே நாம் கால்சியம் அதிகம் இருக்கும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது.

சோயா பால் :

பெண்களின் எலும்பு பிரச்சனைகளை சரி செய்யும்  பொருளாக சோயா பால் விளங்குகிறது.இது எலும்புகளுக்கு அதிக வலிமையை கொடுக்க கூடியது.இதிலும் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் காணப்படுகிறது.

சோயா பாலுடன் சிறிதளவு எள் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

மத்தி மீன் :

கால்சியம் சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள  மீன் உடைந்த எலும்புகளை சரி செய்யும் குணம் படைத்தது.இதனை உணவில் சேர்ந்து வினாத்தாள் உடைந்த எலும்புகளை சரி செய்யும்.

பூசணி விதை :

பூசணி விதைகளில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இது உடைந்த எலும்புகளை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.உடைந்த எலும்புகளை சரிசெய்வதில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

குடைமிளகாய் :

 

முறிந்த எலும்புகளை சரிசெய்வதில் சிவப்பு குடைமிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் இதில் அதிக அளவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

முட்டை :

முட்டையில் கொழுப்பு ,புரதம் மற்றும் வைட்டமின் ,கால்சியம் முதலிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுவதால் முட்டையை நாம் தினமும் உணவில் சேர்ந்து வந்தால் மிகவும் நல்லது. அது எலும்புகளை வலுப்படுத்த தன்மை கொண்டது.

கருப்பு பீன்ஸ் :

முறிந்த எலும்புகள் வலுவடைய செய்யும் பொருட்களில் மிகவும் முக்கியமானது கருப்பு பீன்ஸ்.இது உடைந்த எலும்புகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.