மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது.

By murugan | Published: Dec 03, 2019 02:26 PM

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி  மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீரும் காரமடைபள்ளம் ,கொடநாடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நீரும் வந்து சேர்வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் பவானிசாகர்  ஆற்றில் நீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்பதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc